search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீனா போர் விமானங்கள்"

    அமெரிக்காவை குறிவைத்து தாக்கும் நோக்கத்தில் நெடுந்தூரம் சென்று குண்டுகளை வீசும் அதிநவீன போர் விமானங்களை சீனா உருவாக்கி, பயிற்சி மேற்கொண்டு வருகிறது. #Chinabombertraining #Pentagon
    வாஷிங்டன்:

    உலகில் அதிக அளவிலான மக்கள்தொகையை கொண்டுள்ள சீனா, அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் ராணுவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. சுமார் 20 லட்சம் படைவீரர்களை வைத்திருக்கும் சீனா, ஒவ்வொரு ஆண்டும் ராணுவத்திற்கென பட்ஜெட்டில் அதிகப்படியான நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது.

    ஆப்பிரிக்காவின் கொம்பு என்றழைக்கப்படும் டிஜிபோட்டி நாட்டில்  ராணுவ தளம் ஒன்றை அமைத்துள்ள சீனா, மேலும் சில நாடுகளில் ராணுவ தளங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.

    தற்போது அமெரிக்காவை குறிவைத்து அணுகுண்டுகளை வீசும் நோக்கத்தில் அதிநவீன போர் விமானங்களை உருவாக்கி வருவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்ட்டகான் குறிப்பிட்டுள்ளது.

    இதற்காக நெடுந்தூரம் சென்று தாக்கும் போர் விமானங்களை கடந்த மூன்றாண்டுகளாக மேம்படுத்திவரும் சீன ராணுவம் கடந்த ஆண்டில் மட்டும் ராணுவ மேம்பாட்டுக்காக சுமார் 20 ஆயிரம் கோடி டாலர்களை செலவழித்துள்ளதாகவும் பென்ட்டகான் சுட்டிக்காட்டியுள்ளது. #Chinabombertraining #Pentagon
    ×